📰🚔 கள்ளிமந்தயம் அருகே பேருந்தில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது – 3¼ கிலோ கஞ்சா பறிமுதல்.
📍 கோயம்புத்தூரில் இருந்து திண்டுக்கல் வழியாக மதுரைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக மாவட்ட எஸ்பி. பிரதீப் அவர்களுக்கு கிடைத்த தகவலின் பேரில், கள்ளிமந்தயம் காவல் நிலைய ஆய்வாளர் புகழேந்தி தலைமையிலான போலீசார் நீலக்கவுண்டனூரில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
🚍 அப்போது மதுரைக்கு சென்ற பேருந்தில் சோதனை செய்ததில், மதுரையைச் சேர்ந்த நாகஅர்ஜுன் (26) கஞ்சா கடத்தி செல்வது கண்டறியப்பட்டது.
🚨 அவரை கைது செய்த போலீசார், 3¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#Kallimandhayam#GanajaSeizure#DrugFreeTN#PoliceAction#CrimeNews#Dindigul#Madurai#LawAndOrder#TamilNaduPolice
