🎨🏆 கோவில்பட்டியில் தென் மாவட்ட அளவிலான கலை விழா – 900 மாணவர்கள் பங்கேற்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், அனைவரும் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் தென் மாவட்ட அளவிலான கலை இலக்கிய போட்டிகள் நடைபெற்றன.
சுபா நகரில் உள்ள உண்ணாமலை பொறியியல் கல்லூரியில், தமிழ் கட் சாங் யோகா மற்றும் ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் சார்பில் நடந்த இப்போட்டிகளில் யோகா, சிலம்பம், செஸ், கேரம், நடனம், ஓவியம் என 6 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 900-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
பரிசளிப்பு விழாவில், கோவில்பட்டி ரோட்டரி கிளப் தலைவர் ராஜ்குமார் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
#Kovilpatti #ArtFestival #StudentTalent #Yoga #Silambam #Dance #Painting #VoteAwareness
