🍽️ சிலிண்டர் தட்டுப்பாடு: திருப்பூரில் ஓட்டல்களில் தக்காளி சாதம், கிச்சடி மட்டும் – சங்க செயலாளர் நாகராஜன்.

திருப்பூர் மாவட்டத்தில் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல்களை மூடும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஓட்டல் உரிமையாளர்கள் சங்க செயலாளர் நாகராஜன் தெரிவித்தார்.

தினமும் சுமார் 2 லட்சம் பேர் உணவகங்களை நம்பி உள்ளனர்; இதில் 50 ஆயிரம் பேர் முழுமையாக ஓட்டல்களையே சார்ந்துள்ளனர்.

தினசரி 1500 சிலிண்டர்கள் தேவைப்படும் நிலையில் தட்டுப்பாடு ஏற்பட்டதால் அடுத்த 2 நாட்கள் மட்டுமே ஓட்டல்களை நடத்த முடியும் என கூறினார்.

இதனால் தக்காளி சாதம், கிச்சடி போன்ற எளிய உணவுகள் மட்டுமே தயாரிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

#Tiruppur #GasCylinderShortage #HotelOwners #TamilNaduNews #BreakingNews #FoodIndustry