பெரம்பலூர் மாவட்டம் வேப்பூரில், அகில இந்திய விவசாய சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் அருகே வேப்பூரில் அகில இந்திய விவசாய சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் காடூர் கிராமத்தை சேர்ந்த கோபி என்பவர் தனது நிலத்தில் மக்காசோளம் விவசாயம் செய்து உள்ளார்
இதனை தொடர்ந்து புதுவேட்டகுடியில் இழங்கி வரும் பாலாஜி என்ற உரக்கடையில் கடந்த மாதம் 09-10-2025 தேதி அன்று தனது நிலத்திற்கு ஐந்து மூட்டைகள் உரங்கள் வாங்கியுள்ளார்
அவர் வாங்கி சென்ற உரம் மூட்டையில் கலப்படம் உரங்கள் உள்ளது என்பதை தெரிந்த கோபி பாலாஜி உரக்கடையில் கேட்டுள்ளார் ஏன் கலப்படமாக உள்ளது என்று கேட்டுள்ளது அதற்கு அவர் நன்றாக கரைத்தால் கரைந்து விடும் என்று கூறி உள்ளார் இதனை தொடர்ந்து கோபி அங்கு இருந்து சென்று தனது மக்காசோளம் நிலத்தில் உரத்தை நீரில் கலந்து பயிர்களுக்கு போட்டு பின்னர் தெளித்து உள்ளார் ஆனால் பயிர்கள் சேதம் அடைந்து உள்ளது இதனை பற்றி பாலாஜி உரக்கடையில் கேட்டு உள்ளார் அதற்க்கு அந்த உரிமையாளர் எந்த பதிலும் கூறாமல் சென்று உள்ளார் இதனால் அதிர்ப்பதி அடைந்து விவசாயி கோபி இதனை பற்றி விவசாய சங்கத்திடம் கூறி உள்ளார் அதனை தொடர்ந்து இன்று வேப்பூர் ஒன்றியம் வேளாண்மை துறை அலுவலகம் விவசாய சங்கம் சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அப்போது பேசிய விவசாய சங்கத்தினர் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் யூரியா மற்றும் பொட்டாஷிட் கட்டுப்பாடு இன்றி மக்களுக்கு கொடுக்க வேண்டும் எனவும்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் தனியார் உரக்கடையூர் இருப்பு நிலவரம் மற்றும் விலை பட்டியல் வைக்க வேண்டும் எனபல்வேறு கோரிக்கை முன்வைத்துகண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய விவசாய சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கம்உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர் .
#FarmersProtest#Perambalur#Veppur#TamilNaduFarmers#FakeFertilizer#KisanSabha#AgricultureNews#FarmersRights#RuralTamilNadu#CropDamage#FarmersUnity#agrialert
