தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடக் கோரி பிப்.12ல் நாடு தழுவிய வேலைநிறுத்தம் – தமிழகத்தில் ரயில் மறியல் போராட்டம்.
🚆✊ தமிழ்நாடு மீன்பிடி தொழிலாளர் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு
📍 கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில்,
தமிழ்நாடு மீன்பிடி தொழிலாளர் சங்க கூட்டமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலாளர் குமார்,
தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் ஒன்றிய அரசின் நான்கு சட்டத் தொகுப்புகளை கைவிடக் கோரி,
பிப்ரவரி 12ஆம் தேதி அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் அகில இந்திய அளவில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்தார்.
🚆 தமிழகத்தில் இந்த போராட்டம் ரயில் மறியல் போராட்டமாக
நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
👥 இதற்கு முன்னதாக,
தமிழ்நாடு மீன்பிடி தொழிலாளர் சங்க கூட்டமைப்பின் மாநில நிர்வாகிகள் கூட்டம்
நாகர்கோவிலில் நடைபெற்றது.
மாநில தலைவர் அந்தோணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்,
ஜெலஸ்டின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
📢 செய்தியாளர்களிடம் பேசிய குமார்,
🎣 மீன்பிடித் தொழிலாளர்களின் நல வாரியம் தற்போது மீன்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால்,
அதைப் பிரித்து தனி வாரியமாக செயல்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
⚠️ மேலும்,
🇮🇳 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில்
மகாத்மா காந்தியின் பெயரை சீரழித்தது கண்டனத்துக்குரியது
🏭 பொது நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும்
👴 60 வயதை கடந்த மீனவர்களுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம் வழங்க வேண்டும்
என்ற முக்கிய கோரிக்கைகளையும் அவர் முன்வைத்தார்.
#Strike#TradeUnions#LabourRights#February12#RailRoko#FishermenWelfare#TamilNaduNews#Kanyakumari#Nagercoil#WorkersMovement
