தூத்துக்குடி மாவட்டம்: ஏரல் அருகே ஓடும் தாமிரபரணி ஆறுவில் மூழ்கி, தேனி மாவட்டம் சேர்ந்த சகோதரிகள் அபிநயா (16) மற்றும் மீனாட்சி (12) உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

🛕 இருவரும் குடும்பத்தினருடன் திருச்செந்தூர் முருகன் கோயில் தரிசனம் செய்துவிட்டு திரும்பும் வழியில் ஏரல் பகுதியில் ஆற்றங்கரைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

👉 அப்போது குளிக்க ஆற்றில் இறங்கிய இருவரும் திடீரென ஆழமான பகுதியில் சிக்கி நீரில் மூழ்கினர்.

🚒 தகவல் அறிந்து வந்த தீயணைப்பு மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

🏥 ஆனால் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

👮‍♂️ சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#Thoothukudi #Eral #Thamirabarani #Theni #Tiruchendur #BreakingNews #TamilNews #RiverAccident #RIP