திருப்பூரில் எஸ்ஐஆர்-க்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போராட்டம், வாக்காளர்கள் பட்டியலில் முறைகேடு செய்யக்கூடாது, வாக்குரிமையை பறிக்கும் எஸ்ஐஆர்ஐ திரும்பப் பெற வேண்டும் என கைகளில் பதாகைகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்பி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம். தமிழ்நாட்டில் கடந்த நான்காம் தேதி முதல் வாக்காளர்கள் சிறப்புத் தீவிர பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்தான் இந்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் இன்று எஸ்ஐஆருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட குமரன் சிலை அருகே எஸ்ஐஆருக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் திமுக மத்திய மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியா கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மக்கள் நீதி மய்யம், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் எங்கள் வாக்கு எங்கள் உரிமை, தமிழர்களின் வாக்குரிமையை பறிக்காதே, எஸ் ஐ ஆர் ஐ உடனடியாக திரும்ப பெற வேண்டும், வாக்காளர்கள் பட்டியலில் முறைகேடு செய்யாதே, எஸ் ஐ ஆர் ஐ கைவிட வேண்டும், பாஜகவின் கைப்பாவையாக இந்திய தேர்தல் ஆணையம் செயல்படுவதாக குற்றம் சாட்டி கைகளில் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.