சிலிண்டர் விலை உயர்வு: இன்று முதல் LPG கேஸ் விலை அதிகரிப்பு.
நாடு முழுவதும் இன்று முதல் LPG கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஈரான்–அமெரிக்கா போர் சூழ்நிலை காரணமாக சர்வதேச எரிபொருள் சந்தையில் ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் ரூ.60 உயர்ந்து ரூ.868.50 இலிருந்து ரூ.928.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.114.50 உயர்ந்து ரூ.2043.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
#LPGPriceHike#CylinderPrice#GasPrice#IndiaNews#FuelPrice#BreakingNews#TamilNews
