கோவை வெள்ளலூர் பகுதியில் இருந்து மத்திய அதிவிரைவு படை போலீசார் 142 பேர் ஆனைமலை அருகே உள்ள கோட்டூர் காவல் நிலையத்திற்கு வருகை புரிந்தனர் .
இதனை அடுத்து கோட்டூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் எந்தெந்த பகுதிகள் பதட்டமான பகுதிகள் எனவும், அடிக்கடி பிரச்சினை, கலவரம், ஜாதி மோதல்கள் போன்ற சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் உள்ளதா என கோட்டூர் காவல் நிலையத்தில் கேட்டறிந்தனர்.
மத்திய அதிவிரைவு படை அதிகாரி கூறுகையில் கோவை மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் கலவரம் ஏற்படும் பகுதிகள் என ஆய்வு செய்து வருகிறோம். எதிர்காலத்தில் இப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் மாநில போலீசார் கட்டுப்படுத்த முடியாத சூழல் உருவானால் மத்திய அதிவிரைவு படையினர் வருகை புரிவார்கள் இதற்கு முன்னோட்டமாக கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறினார் .
ஆனைமலையை அடுத்த கோட்டூர் கோட்டூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மத்திய அதிவிரைவு படை
