🚩 அருள்மிகு நாகராஜா திருக்கோவிலில் தைப்பெருந்திருவிழா – 9ஆம் நாள் தேரோட்டம் கோலாகலம்
🛕 கன்னியாகுமரி மாவட்டத்தின் பழமையான மற்றும் பாரம்பரியமிக்க அருள்மிகு நாகர்கோவில் நாகராஜா திருக்கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் தைப்பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 9ஆம் நாள் தேரோட்டம் இன்று நடைபெற்றது.
📿 கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில், தினமும்
✨ சிறப்பு அபிஷேகம்
🙏 சிறப்பு வழிபாடு
🎶 சமய சொற்பொழிவு, இசை கச்சேரி
💃 பரதநாட்டியம்
🚶♂️ இரவு சாமி வீதி உலா
ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
🚩 இன்று நடைபெற்ற தேரோட்டத்தில், சாமி பல்லாக்கில் வந்து தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
🌼 குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் கேரளாவிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
🌙 இன்று இரவு சப்தவர்ணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
🔱 நாளை 10ஆம் நாள் விழாவில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டு,
🌊 ஆராட்டு நிகழ்ச்சியுடன் தைப்பெருந்திருவிழா நிறைவு பெறுகிறது.
#NagarajaTemple#ChariotFestival#ThaiPerunthiruvizha#Nagercoil#Kanyakumari#TempleFestival#TamilNaduNews#DevotionalEvent
