🚨 ஹோட்டலை மூடக் கோரி அட்டகாசம் – புலம்பெயர் தொழிலாளியை அவதூறாக பேசிய காவலர்
ஈரோட்டில் உள்ள ஒரு ஃபாஸ்ட் ஃபுட் கடையை மூடக் கோரி, காவலர் ஒருவர் லத்தியால் கடை பொருட்களை அடித்து கீழே தள்ளியதுடன், புலம்பெயர் தொழிலாளியை அவதூறாக பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“எந்த ஊருடா நீ… இது என் சொந்த ஊரு…” என மிரட்டும் வகையில் பேசியதாக கூறப்படும் இந்த சம்பவம், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகி சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
#Erode #Police #FastFoodShop #CCTV #PolimerNews #MigrantWorkers #AbuseOfPower
