🚨 நாகர்கோவில் வியாபாரிகள் போராட்டம்.

கன்னியாகுமரி மாவட்டம்: நாகர்கோவில் வடசேரியில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க கனக மூலம் சந்தையை மூடி, ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் நாகர்கோவில் மாநகராட்சி திட்டத்திற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருவிதாங்கூர் மன்னர்கள் காலத்தில் உருவான இந்த 100 ஆண்டு பழமையான சந்தை அகற்றப்பட்டால் 500க்கும் மேற்பட்ட வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் என அவர்கள் கூறினர்.

இன்று மாலை அனைத்து கடைகளையும் அடைத்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

#Nagercoil#TradersProtest#Kanyakumari#TamilNews