🚜 விவசாயக் கடன்கள் புறக்கணிப்பு – கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ஐக்கிய விவசாயிகள் யாத்திரை தொடக்கம்
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயக் கடன்களை ரத்து செய்வோம் என கூறிய மத்திய அரசு விவசாயிகளை கைவிட்டுள்ளதாக ஐக்கிய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் குற்றம்சாட்டினார்.
அதே நேரத்தில் 14.5 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் கடன்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். எம்.எஸ்.சுவாமிநாதன் குழு உள்ளிட்ட பரிந்துரைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது.
மார்ச் 19-ம் தேதி டெல்லி சென்றடைய திட்டமிடப்பட்டுள்ளது.
#விவசாயிகள்#FarmerProtest#KanyakumariToKashmir#FarmLoanWaiver#SwaminathanCommission#UnitedFarmersUnion#IndianFarmers
