🚀 திருச்சி தூய வளனார் கல்லூரியில் “பிட்ச் ஃபெஸ்ட் 2026” தொடக்கம்

திருச்சி தூய வளனார் தன்னாட்சி கல்லூரியின் கணினி அறிவியல் துறை சார்பில், மாணவர்களின் புத்தாக்கச் சிந்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் “PITCH FEST 2026” என்ற இரண்டு நாள் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் தொடங்கியது.

கல்லூரி அதிபர் Dr.பவுல்ராஜ் மைக்கேல், செயலாளர் Dr.M.ஆரோக்கியசாமி சேவியர் மற்றும் முதல்வர் Dr.S.மரியதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். XB Group தலைவர் Dr.S.சேவியர் பிரிட்டோ, அடையார் ஆனந்தபவன் நிர்வாக இயக்குனர் K.சீனிவாச ராஜு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் உரையாற்றினர். பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களின் புதிய வணிக யோசனைகள் மற்றும் தொழில்நுட்பத் தீர்வுகளை இந்நிகழ்வில் முன்வைத்தனர்.

#PitchFest2026 #StJosephsCollege #Trichy #StudentInnovation #Entrepreneurship #ComputerScience #StartupIdeas