🕉️ காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயிலில் இரண்டாம் நாள் தெப்பத் திருவிழா
காஞ்சிபுரம் ஸ்ரீ கச்சபேசுவரர் – சுந்தராம்பிகை திருக்கோயிலில் கார்த்திகை மாத இரண்டாம் நாள் தெப்பத் திருவிழா ஆனந்தமாக நடைபெற்றது. பழமையான பரிகாரத் தலமாக விளங்கும் இந்த கோயிலில் காலை சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனைகள் நடைபெற்றது. மேளதாள இசையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுந்தராம்பிகை சமேத கச்சபேசுவரர், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் இஷ்டசித்தி தீர்த்த திருக்குளத்தில் ஏற்றப்பட்டு 7 சுற்றுகள் வலம் வரச் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கான அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும் விழா குழுவினரும் செய்திருந்தனர். பாதுகாப்பு பணிக்காக போலீசும் தீயணைப்பு துறையும் கடமையாற்றின.
#Kancheepuram
#KachabeswararTemple
#TeppeThiruvizha
#KarthigaiMonth
#HinduTemple
#DevotionalNews
#SpiritualUpdates
