🔥 செங்கோட்டையன் – அதிமுக உள்கலகம், பழைய சர்ச்சைகள்… புதிய அரசியல் நகர்வுகள்!

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த ஒன்றரை ஆண்டாக அதிமுகவுடன் தொடர்புடைய பல்வேறு சர்ச்சைகளில் இடம்பெற்று வந்ததாக அதிமுக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

🔹 கடந்த வருடம் முழுவதும் கட்சிக்குள் கலகம் ஏற்படுத்தினார், பனிப்போர் நடந்தது என்றும் குற்றச்சாட்டுகள்.
🔹 திடீரென “அதிமுக ஒன்றிணைய வேண்டும்” என்றும், “நானே ஒன்றிணைப்பேன்” என்றும் பேசியதோடு…
🔹 ஓ.பி.எஸ் – தினகரன் ஆகியோரை சந்தித்து “சின்னம்மாவுடன் சேர்ந்து கட்சியை மீண்டும் எழுப்புவோம்” என்றும் தெரிவித்ததாக தகவல்.
🔹 டெல்லி சென்று பாஜக தலைவர்களையும் சந்தித்தார்.

🎭 “நடிப்பு ஓடல… விஜய் அண்ணா பட்டறைக்கு சென்றாரா?”

செங்கோட்டையனின் அரசியல் நகர்வுகள் பலவும் வெற்றி பெறாததால்,
👉 “நடிப்பு கற்க விஜய்யின் நடிப்பு பட்டறைக்கே சென்றுள்ளார்” என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான விமர்சனங்கள்.

🏛️ 2011–2016 கால அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட சர்ச்சைகள்

🔸 2011ல் அம்மா ஜெயலலிதா அமைச்சரவையில் முதலில் வேளாண்மைத் துறை, பின்னர் தகவல் தொழில்நுட்பத் துறை வழங்கப்பட்டது.
🔸 சில மாதங்களில், அவரது மனைவி ஈஸ்வரி மற்றும் மகன் கதிரீஸ்வரன் —
“செங்கோட்டையன் வீட்டுக்கே வருவதில்லை; பி.ஏ. ஆறுமுகம் வீட்டிலேயே இருக்கிறார்”
என அம்மாவிடம் புகார் செய்ததாக கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டது.
🔸 இதையடுத்து அம்மா செங்கோட்டையனை கடுமையாக எச்சரித்தார்.
🔸 ஆறுமுகம் மற்றும் அவரது தரப்பு பல முறைகேடுகளில் ஈடுபட்டதால்,
– 3 அரசு பி.ஏ.க்கள் நீக்கம்
– ஆறுமுகம் மீது வழக்குகள்
– அதிரடி கைது
🔸 பின்னர், செங்கோட்டையனின் துறை மாற்றப்பட்டு, வருவாய்த்துறை வழங்கப்பட்டது.
🔸 2012 சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தேர்தல் பொறுப்பாளராக நியமனம்.
🔸 பின்னர் மீண்டும் குடும்பப் புகார் – இதையடுத்து
ஜூலை 18, 2012 அன்று அம்மா அவர்களால்
– அமைச்சர் பதவி பறிப்பு
– கட்சிப் பதவிகள் நீக்கம்
– ‘கூப்பில்’ அவர் வைத்த நிலை

அம்மா மறையும் வரை செங்கோட்டையனுக்கு MLA சீட் தவிர வேறு பதவி வழங்கப்படவில்லை.

அதன் பின்னரே எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் அவர் மீண்டும் அமைச்சர் ஆனார்.

⚠️ “அதிமுகவை பலப்படுத்துவேன்” என்றவர்…

🔹 கடந்த ஒரு வருடமாக கட்சிக்குள் கலகம் ஏற்படுத்தினார்.
🔹 ஒன்றிணைவு பேச்சு பேசியும், செயல்பாடுகள் அதற்கு முரணானவை என கட்சி வட்டார விமர்சனம்.

⚡ அதிமுகவின் ‘மூவர் கூட்டணி’ குறித்த விமர்சனம்

👉 “அம்மாவால் துரத்தப்பட்ட தினகரன், பதவி பறிக்கப்பட்ட செங்கோட்டையன், வீட்டுச் சிறை அனுபவித்த பன்னீர்…
இவர்கள்தான் இன்று அதிமுகவை அழிக்க முயற்சிக்கின்றனர்.”

#AIADMK #EdappadiPalanisamy #Sengottaiyan #TamilNaduPolitics #OPS #TTV #Vijay #TNNews #BreakingNews #PoliticalUpdate #ADMK