📰 7 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த 8 வயது சிறுமி – கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்.
கோவையில் மூளைச்சாவு அடைந்த 8 வயது சிறுமியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
கோவை கவுன்சிலர் தம்பதியின் மகளான வெண்பா, கடந்த 23ஆம் தேதி மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பலனின்றி, மூளைச்சாவு உறுதி செய்யப்பட்டது.
மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன்வந்த நிலையில், சிறுமியின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதன் மூலம் 7 பேருக்கு புதிய வாழ்வு கிடைத்துள்ளது.
இந்த சம்பவம் கோவையில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 🕊️
#Coimbatore#OrganDonation#BrainDeath#LifeGift#TamilNews#Humanity
