📰 முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் விருது பெற்ற ச. விடுதலை விரும்பிக்கு கோவை தெற்கு கழகம் வாழ்த்து
தமிழ்நாடு அரசு சார்பில் 2025 ஆம் ஆண்டிற்கான முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் விருதை, கழகத் தலைவர் மற்றும் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதியார் அவர்களின் பொற்கரங்களால் பெற்ற மதிப்பிற்குரிய ஐயா ச. விடுதலை விரும்பி அவர்களை, கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி, புத்தகம் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் பொதுக்குழு உறுப்பினர் ரகு துரைராஜ், கலங்கல் கிளை செயலாளர் சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர். இந்த நிகழ்வு கழக நிர்வாகிகளிடையே பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
TamilNaduGovernment #CMOfTamilNadu #Thalapathy #KalaignarAward #TamilCulture #TamilLiterature #DMK #CoimbatoreSouth #PartyLeaders #AwardCeremony #PublicRecognition
