📰 பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி கன்னியாகுமரியில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடிய பாஜகவினர் 🎉

பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பாஜகவினர் உற்சாகமாக கொண்டாடினர்.

பத்மநாபபுரம் அருகே உள்ள முட்டைக்காடு சந்திப்பு பகுதியில், பாஜக மேற்கு மாவட்ட துணைத் தலைவர் பவானி எட்வின் ஜோஸ் தலைமையில், பட்டாசு வெடித்து, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கி வெற்றியை கொண்டாடினர்.

இந்நிகழ்வில் தக்கலை வடக்கு ஒன்றியத் தலைவர் ஜெகன் ஜோதி பாஸ் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாகச் சிறப்பித்து கலந்து கொண்டனர்.

#BiharElections#NDAVictory#BJPCelebration#Kanyakumari#PoliticalNews#Election2025#BJP#PublicCelebration#Fireworks#SweetDistribution#TamilNaduNews#BJPWorkers