📰 திருச்சியில் ஜவஹர்லால் நேரு 136வது பிறந்த நாள் விழா – காங்கிரஸ் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை 🌹🇮🇳

முன்னாள் இந்திய பிரதமரும், பாரத ரத்னாவும் ஆன பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களின் 136வது பிறந்த தினத்தை முன்னிட்டு, திருச்சி சேவா சங்கம் எதிரே அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு இன்று மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் வழக்குரைஞர் எம். சரவணன் தலைமையில், மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம், கள்ளத்தெரு குமார், மல்லியம்பத்து தனசேகர், வெல்லமண்டி பாலசுப்ரமணியன், மலைக்கோட்டை சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலையில் நேரு சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் கோட்டத் தலைவர் மார்க்கெட் சந்துகடை சம்சுதீன், அண்ணா சிலை விக்டர், தாகூர் தெரு முருகன், திருச்சி மகாராஜா, வழக்கறிஞர் பிரிவு சுகன்யா, விக்னேஷ், மேலபுதூர் சத்தியநாதன், மகளிர் அணி ஜோதி, விஜயலட்சுமி, நிர்மல் குமார், கோகுல் கிருஷ்ணமூர்த்தி, இபி ரோடு சண்முகம், மள்ளியம்பத்து சிங்காரவேல், ஆட்டோ அபுதாஹீர், கிஷோர் குமார், காட்டூர் செல்வா, உறையூர் விஜி, மலைக்கோட்டை சேகர் மற்றும் பலரும் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

#JawaharlalNehru #Nehru136 #BirthAnniversary #CongressParty #Trichy #Tribute #FloralTribute #BharatRatna #FormerPrimeMinister #NehruJayanti #IndianHistory #CongressLeaders #RespectAndHonor #PublicEvent #TNPolitics