கேரள நிதி அமைச்சர் கே.என். பாலகோபால், ஜனவரி 29 அன்று 2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
இதில், சாலை விபத்துகளில் காயமடைபவர்களுக்கு விபத்து நடந்த முதல் 5 நாட்களுக்கு அரசு சார்பில் முழுமையான இலவச சிகிச்சை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் இந்த வசதி அமல்படுத்தப்படும். இந்த அறிவிப்பு மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
