📰 காஞ்சிபுரம்: திமுக–தவெக கள்ளக் கூட்டணி எடுபடாது – இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி
⚖️ உயர்நீதிமன்றத்தை தமிழக அரசு திமுக பிரச்சார மேடையாக பயன்படுத்தி, இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில் கருத்துகள் தெரிவிக்கப்படுவதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றம்சாட்டினார்.
🪔 திருப்பரங்குன்றத்தில் விளக்கேற்ற வேண்டும் என திமுக பிரமுகரைச் சேர்ந்த நபர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அரசு தரப்பில் யாரும் நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்கவில்லை என்றும், அவர்களுக்கு ₹1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 🍶 கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசு, இந்து மனதை புண்படுத்தாமல் இந்த வழக்கிலும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.
📉 தவெக தலைவர் விஜய் ஈரோட்டில் நடத்திய கூட்டம் தோல்வியடைந்ததாகவும், 🎭 நடிகர்களை முன்வைத்து ஒவ்வொரு தேர்தலிலும் திமுக வாக்குகளைப் பிரிப்பதாகவும் விமர்சித்தார். கடந்த தேர்தலில் நடிகர் கமலை முன்னிறுத்தி மக்கள் நீதி மையம் தொடங்க வைத்து வாக்குகளை மாற்றியதாக கூறினார். 🎬 நடிகர் விஜய் திமுகவின் “A Team” ஆக செயல்பட்டு, அதிமுக மற்றும் பாஜக வாக்குகளை அபகரிக்க முயற்சி நடப்பதாகவும், 🤝 திமுக–தவெக கள்ளக் கூட்டணி எடுபடாது என்றும் அவர் தெரிவித்தார்.
#Tirupparankundram
#HinduMakkalKatchi
#ArjunSampath
#DMK
#TVK
#ActorVijay
#ErodeMeeting
#HinduSentiments
#JusticeForHindus
#CompensationDemand
#IllicitLiquor
#TamilNaduPolitics
#Kanchipuram
#BJP
#NewsSouthIndia
#SouthIndiaNews
#BreakingNews
#LatestNews
#NewsUpdate
#IndiaNews
#TamilNadu
#Chennai
#SouthIndia
