கவுண்டம்பாளையம்: கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டில் நேற்று அதிர்ச்சியான தொடர்ச்சித் திருட்டு நடந்துள்ளது. ஒரே நேரத்தில் 13 வீடுகளில் பூட்டுகள் உடைக்கப்பட்டு, 56 பவுன் நகை மற்றும் ₹3 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இங்கு ஐந்து பிளாக்குகளில் மொத்தம் 1848 வீடுகள் உள்ளன. இதில் ‘A’ மற்றும் ‘D’ பிளாக்குகளை குறிவைத்து மர்மநபர்கள் நேற்று காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை செயல்பட்டதாக ஆரம்ப விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

‘A’ ப்ளாக்கில் வசிக்கும் அரசு அதிகாரி சண்முகவடிவு வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை.

இன்னொரு அரசு அதிகாரி வீட்டில் ₹1 லட்சம் ரொக்கம் திருட்டு.

மேலும் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் 2, 3, 4 பவுன்கள் மற்றும் ரொக்கம் சேர்த்து கொள்ளை.

மொத்தமாக 56 பவுன் நகை மற்றும் ₹3 லட்சம் ரொக்கம் காணாமல் போனது உறுதி செய்யப்பட்டுள்ளது.

போலீசார் சுற்றுவட்டார சிசிடிவி காட்சிகளை சேகரித்து, கொள்ளை கும்பலை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

#கவுண்டம்பாளையம் #CoimbatoreNews #TamilNews #HousingUnit #திருட்டு #CrimeUpdate #PoliceInvestigation #TamilBreakingNews #LatestTamilNews #SafetyAlert #TNPolice #CoimbatoreCrime