திமுக தகவல் தொழில்நுட்ப மாநில செயலாளரும் தமிழகதொழில் முதலீட்டு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தமிழகத்திலேயே நடமாட முடியாது. என முன்னாள் அதிமுக வருவாய்த்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தொடர்ந்து திமுக அமைச்சர் டி .ஆர்.பி ராஜா வை அவதூறாக பேசி வருகின்றனர் அதனை கண்டிக்கும் வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அண்ணா சிலை எதிரில் திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் முன்னாள் வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் உருவ பொம்மை எரித்தும் , அவரது உருவ படத்தில் காலணி வீசியும் கண்டன முழக்கம் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்