நாகர்கோவில் தலைமை நீதிமன்றத்திற்கு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் 🚨

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தலைமை நீதிமன்றத்திற்கு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு மூன்று குழுக்களாக பிரிந்து மோப்பநாய், மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் நீதிமன்ற வளாகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

பாதுகாப்பு காரணமாக வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மற்றும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. ⚖️🐕

#Nagercoil #BombThreat #PoliceSearch #TamilNaduNews #BreakingNews