நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு, மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் இன்று யு/ஏ சான்றிதழ் வழங்கியதாக அறிவித்துள்ளது.

நாளை (ஜனவரி 10) வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 🎥, சான்றிதழ் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதில் ரவி மோகன், அதர்வா, ஶ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

1960களில் தமிழ்நாட்டில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்களை மையமாக கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது ✊📜.

நடிகர் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படத்திற்கு சான்றிதழ் தாமதமான சூழலில், பராசக்தி படத்திற்கும் சான்று கிடைக்காமல் இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இன்று யு/ஏ சான்று வழங்கப்பட்டதால் ✅, பராசக்தி திரைப்படம் திட்டமிட்டபடி நாளை வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

#Parasakthi
#Sivakarthikeyan
#SudhaKongara
#TamilCinema
#UACertificate
#CBFC
#Kollywood
#HindiAntiImposition
#MovieNews
#NewsSouthIndia
#SouthIndiaNews
#BreakingNews
#LatestNews
#NewsUpdate
#IndiaNews
#TamilNadu
#Chennai
#SouthIndia