கர்நாடகா அணையில் இருந்து தமிழகத்திற்கு இந்த ஆண்டு 200 மடங்கு அதிகமாக நீர் திறப்பட்டுள்ளது
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மழை பொழிவுக்குறைந்தால் தான் தண்ணீர் பிரச்சனை ஏற்படுகிறது, இது இயற்கையின் பிரச்சனை என கர்நாடக மாநில விவசாய துறை அமைச்சர் சாலுவராயசாமி பேட்டி
கர்நாடகா விவசாயத்துறை அமைச்சர் சலுவராயசாமி ஒரு நாள் பயணமாக பெங்களூர் இருந்து தனி ஹெலிகாபர் மூலமாக காஞ்சிபுரம் ஆன்மீக பயணமாக வந்தடைந்தார், பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் ஹெலிகாப்டர் இருந்து கார் மூலமாக காஞ்சிபுரம் அருள்மிகு காமாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர் குடும்பத்துடன் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகிறார், கோவில் நிர்வாக மூலமாக சிறப்பான வரவேற்பு அளித்து பிரசாதங்களும் புகைப்படமும் அமைச்சருக்கு வழங்கப்பட்டது.
பின் செய்தியாளரை சந்தித்த அமைச்சர்,
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மக்கள் நண்பர்கள் ஆனால் இரு மாநிலத்திற்கும் தண்ணீர் பங்கீட்டில் தான் பிரச்சனை, காவிரி ஆற்றில் இடையே அணை கட்டுவது குறித்து நீதிமன்ற உத்தரவு பின் அணை கட்டுவது குறித்து பரிசீலனைக்கப்படும்
பீகார் தேர்தலில் தேர்தலுக்குப் பின் கருத்துக்கணிப்பில் சரியான முடிவாக இருக்காது இன்னும் மூன்று நாள் காத்திருந்தால் என்ன முடிவு என தெரிய வரும்
SIR குறித்து காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் அறிவுறுத்தல் படி கர்நாடக மாநிலத்தில் பின்பற்றி வருகிறோம்
இந்த ஆண்டு கர்நாடகா அணையிலிருந்து தமிழகத்திற்கு 200 மடங்கு அதிகமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது,
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மழை குறைவாக இருந்தால் மட்டுமே தண்ணீர் பிரச்சனை ஏற்படுகிறது, இது கர்நாடகாவின் பிரச்சனை அல்ல இயற்கையின் பிரச்சனை என கர்நாடக மாநில விவசாய துறை அமைச்சர் சாலுவராயசாமி காமாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்
#KarnatakaMinister #Salvarayasamy #KanchipuramVisit #KamakshiAmmanTemple #CauveryIssue #WaterSharing #TamilNaduNews #KarnatakaNews #InterstateRelations #CauveryWaterDispute #KanchipuramNews #TamilNaduPolitics #KarnatakaAgricultureMinister #WaterManagement #SouthIndiaNews #NaturalIssue #TNKAWater #TamilNews #IndiaPolitics #BreakingNews
