கன்னியாகுமரியில் வாக்கு எண்ணும் மைய ஆய்வு – ஆட்சியர், எஸ்.பி. நேரில் பார்வை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட உள்ள 1914 வாக்குச்சாவடிகளுக்கான மின்னணு வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பு மற்றும் வாக்கு எண்ணும் பணிகளுக்காக நாகர்கோவில் கோணம் அரசு தொழில்நுட்ப கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதனை மாவட்ட ஆட்சியர் அழகு மீனா மற்றும் எஸ்.பி. ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தனர்.
மாவட்டத்தில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள நிலையில், தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
#Kanyakumari #Election2026 #VoteCounting #TamilNadu #ElectionUpdate #Nagercoil #BreakingNews
